தொடர்ந்து 8வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கெத்து காட்டும் முகேஷ் அம்பானி

  0
  1
  முகேஷ் அம்பானி

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

  ஐ.ஐ.எப்.எல். வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆண்டு தோறும்  ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹூருன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலையும் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.80 லட்சம் கோடியாம். 

  அசிம் பிரேம்ஜி

  இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் லண்டனை சேர்ந்த இந்துஜா மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடிதான். பெரிய அளவில் தான தர்மங்களை செய்து வருபவரும், விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1.17 லட்சம் கோடி. ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான எல்.என்.மிட்டல் ரூ.1.07 லட்சம் கோடி சொத்துகளுடன் இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

  கவுதம் அதானி

  பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானிக்கு ரூ.94,500 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாம். கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹூருன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் 953 கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு பட்டியலில் 831 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.