தொடர்ந்து 48 மணி நேர படப்பிடிப்பு! மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய பிரபல நடிகை

  0
  10
  gehana vasisth

  தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் ஈடுபட்டிருந்ததால் பிரபல நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் ஈடுபட்டிருந்ததால் பிரபல நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக நடித்துவருபவர் கெஹனா வசிஸ்த், இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். தற்போது வெப் சிரிஸ் ஓன்றுக்கு நடித்துவரும் கெஹனா, அதற்காக தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.

  gehana vasisth

  அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக கெஹனா மும்பையில் உள்ள ரக்‌ஷா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கெஹனாவுக்கு சர்க்கரை நோய் இருப்பதும் தெரியவந்தது. மூச்சுவிட சிரமப்படும் கெஹனாவுக்கு செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்டுள்ளது.