தொடர்ந்து 4வது முறையாக தூய்மையான நகரம் பட்டத்தை தட்டி சென்ற இந்தூர்…. அப்படின்னா என்ன என்று கேட்கும் கொல்கத்தா…..

  0
  16
  பிந்து-ஜியாகி திருமணம்

  தொடர்ந்து நான்காது முறையாக தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் தட்டி சென்றது. அதேசமயம் தூய்மை நடவடிக்கையில் மிகவும் மோசமான உள்ள நகரமாக கொல்கத்தா விளங்குகிறது.

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை நடவடிக்கைகளை ஆதரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் மோடி அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சுத்தமான நகரத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

  இந்தூர்

  10 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்முடிவில், இந்தியாவில் மிகவும் தூய்மையான நகரமாக தொடர்ந்து 4வது முறையாக இந்தூர் தேர்வாகியுள்ளது. முதல் காலாண்டில் இரண்டாவது மிக தூய்மையான நகரமாக போபால் தேர்வானது. தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை சுரத் பெற்றது. 

  டாப் 10 தூய்மையான நகரங்கள்

  அதேசமயம் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்)  இந்தியாவின் 2வது அதிக தூய்மையான நகரமாக ராஜ்கோட் தேர்வானது. அதற்கு அடுத்து 3வது இடத்தில் நவிமும்பை உள்ளது. அடுத்து வதோரா மற்றும் போபால் ஆகிய நகரங்கள் முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன. 6 முதல் 10 வரையிலான இடங்களில் அகமதாபாத், நாசிக், கிரேட்டர் மும்பை, அலகாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் உள்ளன. மேலும் தூய்மை நடவடிக்கையில் கொல்கத்தா நகரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.