தொடரை கைப்பற்றுமா இந்தியா? இந்திய வீரர்கள் அறிவிப்பு..?

  0
  4
  Match

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதற்கான கணிக்கப்பட்ட இந்திய வீரர்களின் பட்டியல் இதோ.

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதற்கான கணிக்கப்பட்ட இந்திய வீரர்களின் பட்டியல் இதோ.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதற்கட்டமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. 

  முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. மொகாலியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. 

  இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் எளிதாக 2-0 என தொடரை கைப்பற்றலாம். அதேநேரம் தென்ஆப்பிரிக்கா அணி வென்றால் தொடர் சமனில் முடிவடையும்.

  match

  இந்திய அணி சார்பில் துவக்க வீரர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். அதே நேரம் நடுத்தர வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் நன்கு கை கொடுத்தாலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கீழ் வரிசையில் ஜடேஜா, க்ருனால் பாண்டியா, ஹார்டிக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கைகொடுத்து சரிவில் இருந்து மீட்க பக்கபலமாக இருப்பர். 

  பந்துவீச்சில் தீபக் சஹர் அசத்தி வருகிறார். கடந்த போட்டியில் நவதீப் சைனி சற்று அதிக ரன்கள் கொடுத்ததால், இன்றைய போட்டியில் கலீல் அஹமது களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

  பெங்களூர் மைதானம் சுழல் பந்து வீச்சு இருக்க ஏதுவாக இருக்கும் என்பதால் சஹால், சஹார் இருவரில் ஒருவர் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

  இன்றைய போட்டியில் கணிக்கப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல்:

  ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ராகுல் சஹார், கலீல் அஹ்மது.