தொடரும் விபத்து…உயிர்பலிகள்: படப்பிடிப்பு தளத்தால் அச்சத்தில் உறைந்துள்ள திரைத்துறையினர்!

  0
  1
  ஈ.வி.பி பிலிம் சிட்டி

  பொழுதுபோக்கு பூங்கா துவங்கப்பட்டது. இது அரசு நிலத்தை ஆக்கிரமித்துத் துவங்கப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து பூங்கா மூடப்பட்டது.

  சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்பது தான் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. ஆனால்  இதுபோன்ற விபத்து இந்த பிலிம் சிட்டிக்கு புதிதல்ல. இந்த இடத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்த பொழுதுபோக்கு பூங்கா துவங்கப்பட்டது. இது அரசு நிலத்தை ஆக்கிரமித்துத் துவங்கப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து பூங்கா மூடப்பட்டது.

   

  ttn

  பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட இந்த பூங்காவில் உள்ள ராட்டினத்திலிருந்து  2012 ஏப்ரல் மாதம் சென்னை சின்மயா நகரை சேர்ந்த இளம்பெண் தவறி விழுந்து கால்  எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த  சிறுவன் சறுக்கு விளையாட்டின்  போது  தவறி விழுந்து  உயிர் தப்பினார்.  மீண்டும் அக்டோபர் மாதம்  நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அபியா மேக் ராட்டினத்திலிருந்து விழுந்து உயிர் இழந்தார். இதனால் பூங்கா மீண்டும் மூடப்பட்டது. 

   

  ttn

  இதனால் இந்த இடம் முழுவதும்  படப்பிடிப்பு தளமாக மாறியது. இருப்பினும் விபத்துகளும் உயிர்ப்பலிகளும் நின்றபாடில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது  இரு நடிகைகள் தற்கொலை முயற்சியில் இறங்கினர்.   ரஜினி நடித்த காலா படப்பிடிப்பின்போது  வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார். ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிர் தப்பினார். 

  ttn

  அதேபோல் பிகில் படப்பிடிப்பின் போதும், கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் பலியாகினார். இதனால் அங்கு மண் பலமாக இல்லையோ என சந்தேகமும் எழுகிறது. இங்குள்ள ஒரு கட்டிடம் விரிசல் விழுந்து சாய்ந்த படி  இருந்ததும் பலரும் அறிந்த ஒன்று தான். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் இந்த படப்பிடிப்புத்தளம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது திரைத்துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.