தொடங்கியது முதல் நாமினேஷன்: அந்தர் பல்டி அடித்த வனிதா! ஷாக்கான ரசிகர்கள்! 

  0
  2
  வனிதா

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால் கமல் ஹாசன் போட்டியாளர்களை வந்து சந்தித்து உரையாடினார். அதில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வை பற்றி கமல் ஹாசனிடம் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கூறினர். 

  பின்பு இந்த வார தலைவரலாக மோகன் வைத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் நடைபெறும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியுள்ளது. 

  அதில் முதல் ஆளாக களமிறங்கிய மீரா, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதைத்தொடர்ந்து அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் செய்ய, மதுமிதாவையும்,மீராமிதுனையும் சாக்சி நாமினேஷன் செய்தார். அதைத்தொடர்ந்து கவின், சரவணன் ஆகியோரை பாத்திமா பாபுவும் நாமினேட் செய்தார் . 

  கடைசியாக களமிறங்கிய வனிதா சேரனையும் நாமினேஷன் செய்தார் . இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவை கண்டபடி வசைபாடி வருகின்றனர். ஏனென்றால் நேற்றைய எபிசோடில் சேரன் தனது சகோதரர் போல், அப்பா போல் என்று கூறிவிட்டு இன்று அவரையே நாமினேஷன் செய்தது ரசிகர்களுக்கு கோபத்தை மூடியுள்ளது. இந்த வார நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் யார் வெளியேறப் போகின்றார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.