தே.மு.தி.க அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கலாம்! – விஜயகாந்த் அறிவிப்பு

  0
  2
  vijayakanth

  தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் பற்றாக்குறை உள்ளது. தி.மு.க அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்க அனுமதி அளித்தது.

  தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் பற்றாக்குறை உள்ளது. தி.மு.க அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்க அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி பாலன் இல்லத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி கடிதம் வழங்கியது. தற்போது தே.மு.தி.க-வும் தன்னுடைய கட்சி தலைமை அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்க முன்வந்துள்ளது.

  dmdk-office

  இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தே.மு.தி.க ஆதரவு தெரிவிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முககவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்துக்கும், தினக்கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துக்கும் உதவிகள் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

  dmdk letter