தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 

  0
  7
  aravind kejriwal

  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என அமித்ஷாவுடன் ஆலோசனைக்கு பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என அமித்ஷாவுடன் ஆலோசனைக்கு பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

  டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. இதனால் யமுனா நகர், விஜய் பார்க், கபீர் நகர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை தொடர்வதால் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லி வன்முறையில் இதுவரை சுமார் 10 பேர் உயிரிழந்த நிலையில் 2 செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் யமுனா நகர், கபீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தீவைப்புச் சம்பவங்கள் நீடித்து வருகின்றனர். இதற்கிடையில் டெல்லி வன்முறை குறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். 

  Delhi violence

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்” எனக்கூறினார்.