‘தேவுடா… உதயநிதியை நான் பார்த்தது கூட இல்ல’: அந்தர் பல்டி அடித்த ஸ்ரீரெட்டி

  0
  4
  ஸ்ரீரெட்டி

  படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டுக் கழட்டிவிட்டவர்கள்

  தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர்கள், நடிகர்களை டார்கெட் செய்து தாக்கி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டுக் கழட்டிவிட்டவர்கள் என்று விஷால், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ்  உள்ளிட்ட பலரை அந்த   லிஸ்ட்டில் வைத்து அழகுபார்த்தவர் ஸ்ரீரெட்டி.

  sri

  சமீபத்தில் அந்த அம்மணி  டார்கெட் செய்தது, நடிகரும் பிரபல அரசியல் வாரிசுமான உதயநிதி ஸ்டாலினை  தான்… 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில்  கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும்  என்னுடன் இருந்தீர்கள். ஆனால்  நீங்கள் எனக்கு இதுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை. என்று பதிவிட்டு திமுக வட்டாரத்தைக் கதிகலங்கச் செய்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் கூறி இருந்தார். 

  sri

  இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச்  சந்தித்த ஸ்ரீரெட்டி, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றித் தவறுதலாக போடப்பட்ட பதிவு. அது எனது டிவிட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு. உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது’ என்று அந்தர்பல்டி அடித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

  udhay

  அத்தோடு நிறுத்தினால் பினிஷிங்டச்சாக, ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்குச் சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்று கூறி மிரளவைத்துள்ளார்.