தேர்வுகளில் வெற்றியடைய செய்யும் தூங்காபுளி மரம்!

  0
  2
  தூங்காபுளி மரம்

  இராமாவதாரம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே மிச்சம் இருந்தது. ராமரை ரகசியமாக சந்தித்து பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லஷ்மணனை அழைத்து நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்று, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே காவல் காத்து வந்தான் லஷ்மணன். அந்த சமயத்தில் துர்வாச முனிவர் ராமரை தரிசிக்க வந்தார். 

  tamarind

  லஷ்மணன் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தான். ஏற்கெனவே கோபத்திற்கு பேர் போன துர்வாசர், ‘என்னை இப்பொழுது உள்ளே செல்ல நீ அனுமதிக்காவிட்டால், அயோத்தியே அழிந்து போக சபித்து விடுவேன்’ என்று கூச்சலிட்டார்.
  அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லஷ்மணனும் மகரிஷி துர்வாசருக்கு வழிவிட்டான். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லஷ்மணன் மீது ராமருக்கு கோபம் வந்து, ’
  ‘நீ மரமாகப் போகக் கடவது’ என்று சபித்தார். அதைக் கேட்டதும் லஷ்மணன் கண்ணீருடன், ‘அண்ணா.. தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்?’ என்று கதறினான்.

  tamarind

  ‘லஷ்மணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டுகள் அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது! மரமாக மாறும் நீயே எனக்கு நிழல்தரும் பேறு பெறுவாய்’ என்றருளினார். அதன்படியே திருநெல்வேலி அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லஷ்மணன் புளியமரமாக நின்று சேவை செய்தார்! இந்த மரத்தை இப்போதும் தூங்காப்புளி என்று பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 
  சரி, அதென்ன தூங்காபுளி?
  அதாவது, இந்த மரத்தினுடைய இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. மரமாக மாறிய லஷ்மணன் எப்பொழுதும் தன் கண்களை இமைக்காமல் ராமரை பாதுகாப்பதாக ஐதீகம்.  தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற மாணவர்கள் தேர்வுக்குச் செல்வதற்கு முன்னர், இம்மரத்தை சுற்றி வருகிறார்கள். 
  பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், குரூப் 4, பேங்க், ரயில்வெ என்று போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம்.