தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி அல்ல.. 24ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு – தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

  0
  9
  சுதீப் ஜெயின்

  பாராளுமன்ற தேர்தலுக்கான பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை எண்ணும் பணி மே 23ம் தேதி நடைபெறும் அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தாமதமாகும் என தெரிவித்ததோடு மே 24-ஆம் தேதி கூட முடிவுகள் அறிவிக்கப்படலாம் என இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  bjo vs congress

  மத்தியில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலம் வருகிற மே மாதம் 30ஆம் தேதியன்று முடிவடைய இருப்பதால், அதற்கான பாராளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்தது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெறும் தேர்தலில் இதுவரை ஆறு கட்ட வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துவிட்டன. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றன.

  sudeep jain

  இதற்கான,  அனைத்து தொகுதிகளிலும் பாதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 23 ஆம் தேதி நடைபெற்ற அன்று முடிவுகளும் அறிவிக்கப்படும் என முன்னமே இந்திய தேர்தல் ஆணையம் ஜனாதிபதியின் ஒப்புதலின் படி தெரிவித்தது.
   தற்போது உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் படி, ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 விவிபாட் (VVPAT) -யில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் , வாக்கு பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும், ஒரு விவிபாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ணுவதற்கு ஒருமணி நேரம் ஆகிறது. இதனால் எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டு, தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி மாலை அல்லாமல், 24ஆம் தேதி காலை கூட அறிவிக்கப்படலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் சுதீப் ஜெயின் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.