தேர்தல் கணிப்புலாம் சும்மாங்க… எங்களுக்கு தான் வெற்றி! 

  0
  1
  அதிமுக

  அதிமுகவே தேர்தலில் வெற்றி பெறும் என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

  அதிமுகவே தேர்தலில் வெற்றி பெறும் என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

  amma

  2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவே ஆட்சியை கைப்பற்றும் என்றும் எடப்பாடி பழனிசாமி , தங்கமணி உள்ளிட்டோர் வீழ்வர் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டது ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது. கணிப்பு திட்டமிட்ட திணிப்பு இவற்றையெல்லாம் பொய்யாக்கி ஒன்றரைகோடி தொண்டர்கள் ஊரெங்கும் வழங்க இருப்பது கழகத்தின் சார்பிலான இனிப்பு தான் என அந்த கட்டுரை கூறுகிறதுஊடக கணிப்புகளை நம்பி திமுக இன்னும் இரண்டு நாட்களுக்கு மகிழ்ச்சி கொள்ளட்டும் ஆனால் உறுதியான வெற்றி ஓபிஎஸ் இபிஎஸ் இணைகரத்தால் நடத்தும் ஆட்சிக்கும் அரசுக்கும் தான் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.