தேர்தலுக்கான முன்னோட்டம் தான் நடிகர் சங்க தேர்தல்… கமல் VS ரஜினி!

  0
  2
  Kamal vs Rajini

  அரசியல் யுத்தத்தில் இரு முக்கிய புள்ளிகளான நடிகர் கமல் மற்றும் ரஜினியின் பலத்தை காண்பிக்கும் முன்னோட்ட தேர்தலாகவே இந்த நடிகர் சங்க தேர்தல் பார்க்கப்படுகிறது. 

  அரசியல் யுத்தத்தில் இரு முக்கிய புள்ளிகளான நடிகர் கமல் மற்றும் ரஜினியின் பலத்தை காண்பிக்கும் முன்னோட்ட தேர்தலாகவே இந்த நடிகர் சங்க தேர்தல் பார்க்கப்படுகிறது. 

  ss

  வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலுக்கான போட்டியில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியின் சார்பாக நடிகர் சங்க தலைவர் பதவிக்கு இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் களமிறங்குகிறார். அதேபோல் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்காக நடிகர் நாசா வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு நடிகர் கமல்ஹாசன் முன்மொழிந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் அணி பக்கம் எப்போதும் இருப்பேன் என்றும் நாசர் தான் நடிகர் சங்க தலைவராக வரவேண்டும் என்றும் கமல்ஹாசன் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  aa

  இதேபோன்று சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பாக தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சங்க கட்டட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி, கமலின் விருப்பம். நடிகர் சங்க தேர்தலில் ரஜினி எனக்கு  ஆதரவாக உள்ளார் என்றும், நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார் என்றும் இன்றைய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க தேர்தலில் சவுகிதாராக களமிறங்குவதாகவும் தெரிவித்தார்.