தேர்தலில் வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும் : கவிஞர் வைரமுத்து கருத்து 

  0
  1
  வைரமுத்து

  மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து பதிவிட்டுள்ளார். 

  சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து பதிவிட்டுள்ளார். 

  நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

  இந்த நிலையில் தேர்தல் குறித்து பல்வேறு திரைபிரபலன்கள் ட்விட்டரில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு இன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்திய திருநாடே..நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.