தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழக்குகள் வாபஸ்!

  0
  2
  விஜயகாந்த்

  தேமுதிக தலைவர் விஜயகாந்து மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பபெற்றது.

  தேமுதிக தலைவர் விஜயகாந்து மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பபெற்றது.

  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சனம் செய்ததாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, 2012 முதல் 2016 ஆண்டுகளில் 5 அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.  

  விஜயகாந்த்

  கடந்த 2012ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில்  அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமியை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டில், தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கும், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்குகளை தற்போது தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.