தேனியில் நிறைவடைந்தது ‘எம்ஜிஆர் மகன்’ ஷூட்டிங்: வைரல் போட்டோஸ்!

  0
  9
  எம்ஜிஆர் மகன்

  இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி நடித்துள்ளார்.  

  சீமராஜா படத்திற்கு பிறகு இயக்குநர் பொன்ராம் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் படத்தை  இயக்கியுள்ளார்.  இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி நடித்துள்ளார்.

  sasi

   இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், சமுத்திர கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்  நடித்துள்ளனர்.

  sasi

  இப்படம் கிராமத்துப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.   ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார்.

  இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான நிலையில், நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நிறைவடைந்தது. இதுகுறித்து நடிகர் சசிகுமார்  தனது டிவிட்டர் பக்கத்தில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டுப் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.