தெலங்கானா என்கவுண்டர் அதிகாரிகளுக்கு பரிசு அறிவித்த தொழிலதிபர்! 

  12
   க.அன்பழகன்

  ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது.

  ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பொதுமக்களும், அரசியல்வாதிகளும் வரவேற்பு அளித்தாலும் மனித உரிமை ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

  telagana encounter

  இந்நிலையில் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், ரா குரூப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் தலைவருமான நரேஷ் செல்பார் என்பவர் தெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.