தெலங்கானா என்கவுண்டர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும் – கஸ்தூரி அதிரடி

  21
  கஸ்தூரி

  ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது

  ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பொதுமக்களும், அரசியல்வாதிகளும் வரவேற்பு அளித்தாலும் மனித உரிமை ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

   

   

  இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹைதராபாத் குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டர் போட்டு தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.