தெரு நாயின் பசிக்கு பிஸ்கட் ஊட்டி விட்ட பிரபல நடிகர்! குவியும் பாராட்டுக்கள்!

  0
  2
  கோப்பு படம்

  சென்னை: பிரபல நடிகர் ஒருவர் தெரு நாயின் பசியறிந்து பிஸ்கட் ஊட்டிவிட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

  பாலிவுட் திரையுலகில் காதல், காமெடி, ஆக்ஷன், வில்லத்தனம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் அக்ஷய்குமார். தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

  akshay kumar

  தற்போது இந்தியில் நடித்து வரும் ‘சூர்யவன்ஷி’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஒரு தெரு நாய் மிகவும் பசியுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அந்த நாய் பசியுடன் இருப்பதை அறிந்த அக்ஷய் குமார், உடனடியாக தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரிந்து ஊட்டி விட்டார். 

  அப்போது எடுக்கப்பட்ட விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.