தெருவில் வன்முறையை உருவாக்கி… நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்….எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சாடிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி….

  0
  2
  முக்தர் அப்பாஸ் நக்வி

  எதிர்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் தெருவில் வன்முறையை உருவாக்கி மற்றும் நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள் என மத்திய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டினார்.

  மத்திய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தெருவில் வன்முறையை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் போராடும் சில அரசியல்வாதிகள் எதிர்கட்சியில் உள்ளனர். வன்முறை (வடகிழக்கு டெல்லி) சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

  வடகிழக்கு டெல்லி கலவரம்

  குடியுரிமை சட்டங்களில் திருத்தங்களை நாங்கள் முதல் முதலில் மேற்கொள்ளவில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முந்தைய அரசும் பலமுறை குடியுரிமை சட்டங்களில் பலமுறை திருத்தம் செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வதந்திகளை பரப்பாதீர்கள் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்.

  வடகிழக்கு டெல்லி கலவரம்

  நாம் அனைவரும் அமைதிக்காக முறையிட வேண்டும். மக்களை தூண்டிவிட அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 46 பேர் பலியாகி உள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 254 எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்துள்ளனர். ஆயுத சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளும் அடங்கும். கலவரம் தொடர்பாக 903 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.