தெருவில் செல்பவர்களிடம் சென்று 340 ரூபாய் கொடுத்து அசரவைக்கும் கூகுள் நிறுவனம் 

  0
  2
  google involved in tax evasion

  தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

  பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. இருப்பினும் முக அடையாளங்களை கொண்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் தொழில்நுட்பத்தில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் பிக்ஸல் 4 மற்றும் பிக்ஸல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன்களில் அந்தக் குறைகளை போக்குவதற்காக கள ஆய்வில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது.

  இதற்காக  அமெரிக்காவில் தெருக்களில் செல்வோரிடம் சென்று இந்திய மதிப்பில் 340 ரூபாய் மதிப்புள்ள 5 டாலருக்கான சான்றை வழங்கி அவர்களின் முக அடையாளங்களைப் பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது. ஒரே நிறத்தில் உள்ளவர், வடிவமைப்பை ஒத்த உருவங்கள், இன்ஃப்ராரெட், முகத்தோற்றத்தின் ஆழத்தை நேரத்துடன் பதிவிடுவது, படம் எடுக்கும் சூழல், வெளிச்சம் என பல பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்கிறது.