தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அருணா ஜெகதீசன் ஆணையத்தின் 6-ம் கட்ட விசாரணை நிறைவு

  0
  12
  arunajagadeesan

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது ஆறாம் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது

  சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது ஆறாம் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் ஏற்கெனவே 5 கட்டமாக விசாரணை நடத்தி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்பட மொத்தம் 87 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்தது.

  இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது ஆறாம் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இதில் பொதுமக்கள், கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடற்கூறு ஆய்வு மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 10 பேர் ஆஜராக வாக்குமூலம் அளித்தனர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 21 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி உள்ளனர். இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில், 232 சான்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 109 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.