தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்.. ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு !

  0
  4
  ரஜினிகாந்த்

  இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 25 ஆம் தேதி(இன்று) நேரில் ஆஜராகும் படி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினிகாந்த்துக்குச் சம்மன் அனுப்பியது.

  கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு போராட்டம் இன்னும் வலுப்பெற்றதால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குப் பலரும் ஆறுதல் தெரிவித்தனர். அதே போல நடிகர் ரஜினிகாந்த்தும் தூத்துக்குடி சென்று, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர்’ என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

  ttn

  இந்த வழக்கு விசாரணையை  அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ரஜினி கூறியது பற்றிப் பேசிய வழக்கறிஞர் வடிவேல் முருகன், ரஜினி  துப்பாக்கிச் சூட்டின் போது சில குறியீடுகளைப் பற்றிப் பேசியதாக இங்கு ஆஜரான சாட்சிகள் தெரிவித்துள்ளன. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. அதனால் அவர் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 25 ஆம் தேதி(இன்று) நேரில் ஆஜராகும் படி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினிகாந்த்துக்குச் சம்மன் அனுப்பியது.

  ttn

  ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், கேள்விகளை எழுத்து வடிவில் தந்தால் அதற்குப் பதில் அளிக்கத் தயார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம் பாரதி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, ரஜினிகாந்த்தின் மனுவை ஏற்றுக் கொண்ட விசாரணை ஆணையம், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வழக்கறிஞர் இளம் பாரதியிடம் ரஜினிகாந்த் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ரஜினிகாந்த் முறையாகப் பதில் அளிப்பார் என்று வழக்கறிஞர் இளம் பாரதி தெரிவித்துள்ளார்.