தூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்!

  0
  6
  murder

  காதல் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

  நாமக்கல்:  காதல் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

  நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜூம் சேந்தமங்கலத்தை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணும்  காதலித்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்தில் பிரச்னை இருந்துள்ளது. இருப்பினும் இருவரும் திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். 

   

  crime

  இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அனிதா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அவர்கள் வெட்டிவிட்டுத் தப்பித்துள்ளனர். இதில் அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, விமல் மற்றும் கருப்பசாமி  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

  murder

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த நிக்கல்சனுக்கும், கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருணுக்கும்  முன்விரோதம் இருந்ததாகவும் அவரை கொல்ல வந்த போது  அனிதா மற்றும் அவரது கணவரை வெட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அனிதா, வேறு சாதியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது அண்ணனே ஆள் வைத்து கொலை செய்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்குக்குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.