துவண்டு போன ‘அசோக் லேலண்ட் நிறுவனம்’: தமிழக அரசின் உதவியால் விலகிய நெருக்கடி !

  0
  3
  ashok leyland

  தொடர்ச்சியாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவால் ஆட்டோமொபைல் துறைகளில் கடும் வீழ்ச்சி காணப் படுகிறது.

  தொடர்ச்சியாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவால் ஆட்டோமொபைல் துறைகளில் கடும் வீழ்ச்சி காணப் படுகிறது. பல பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பின் காரணமாக உற்பத்தியை முடக்கி, ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கி வேலையில்லா நாட்களாக அறிவிக்கும் அளவிற்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. 

  ttn

  வீழ்ச்சியைச் சந்தித்த பிரபல நிறுவனங்களில் அசோக் லேலாண்ட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கி வேலையில்லா நாட்களாக அறிவித்து வந்தது. இதனால், ஊழியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில், தமிழக அரசின் உதவியால் தமிழக அரசு வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உள்ளது. 

  ashok

  தமிழக அரசு மக்களின் வசதிக்காகப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ரூ.109 கோடி மதிப்பீட்டில் 370 புதிய பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தற்போது  1750 புதிய பேருந்துகளை உருவாக்க உள்ளது. அதற்கான கான்டிராக்டை அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒரு வருடமாகத் துவண்டு கடந்த அசோக் லேலாண்ட் நிறுவனம் தற்போது புதிய உத்வேகத்துடன் மீண்டும் இயங்கவுள்ளது. இதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.