துறையூரில் கோர விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகை அறிவிப்பு!

  0
  2
  துறையூர்

  8 பேர் பலியான நிலையில் 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  துறையூர்:  திருச்சி துறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் நிவாரண உதவிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்றில் 22 பேர் பயணித்துள்ளனர். கறி  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனத்தில் திடீரென்று  டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்த  நீரில்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

   

  trichy

  இந்த விபத்தில் 8 பேர் பலியான நிலையில் 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  edappadi

  இந்நிலையில் துறையூர் விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு  லட்சம் ரூபாய் நிவாரண தொகை  வழங்கப்படும்  என்று அறிவித்துள்ளார். அதே போல் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயம்பட்டவர்களுக்கு   தலா ரூ.25ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.