துண்டு பேப்பர் செய்யாததை போஸ்டர் செஞ்சுடும்ங்கிற மதுரை மக்களின் நம்பிக்கை பலிக்குமா..!?

  0
  3
   மதுரை

  திருவிழா,அரசியல்,சினிமா எதுவானாலும் சரி மதுரைக்காரய்ங்க அடிக்கிற போஸ்டர் எப்பவுமே அனல் பறக்கும் ! சமீபத்தில் கூட தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டு போய்விட்டதால் மகள் படத்தைப் போட்டு ஒரு அப்பா இறுதிச்சடங்கு போஸ்டர் ஒட்டியதால் மதுரை பரபரப்பானது. இன்னொருத்தர் ‘நானும் என் மனைவியும் பிரிஞ்சு வாழ்கிறோம்.அதனால் நான் செய்த செய்முறையை என் மனைவிக்கு செய்ய வேண்டாம்’என்று போஸ்டர் ஒட்டினார்

  திருவிழா,அரசியல்,சினிமா எதுவானாலும் சரி மதுரைக்காரய்ங்க அடிக்கிற போஸ்டர் எப்பவுமே அனல் பறக்கும் ! சமீபத்தில் கூட தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டு போய்விட்டதால் மகள் படத்தைப் போட்டு ஒரு அப்பா இறுதிச்சடங்கு போஸ்டர் ஒட்டியதால் மதுரை பரபரப்பானது. இன்னொருத்தர் ‘நானும் என் மனைவியும் பிரிஞ்சு வாழ்கிறோம்.அதனால் நான் செய்த செய்முறையை என் மனைவிக்கு செய்ய வேண்டாம்’என்று போஸ்டர் ஒட்டினார்.இதோ,இன்னொரு போஸ்டர் பஞ்சாயத்து வந்திருக்கு!

  poster

  ‘கண்மாய் விற்பனை’ என்று போஸ்டர் போட்டு ஏகப்பட்ட ஆபர்களையும் சொல்கிறது அந்தப் போஸ்டர். பிரச்சினை என்னன்னு விசாரித்தால், மதுரை ஊமச்சிகுளத்தில் உள்ள ‘இடந்தகுளம் கண்மாய்’ மற்றும் பண்ணைக்குடியில் உள்ள ‘அம்மன்குளம்’ கண்மாய்களின் கரை ஓரங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்கள்.இன்னும் சிலர் வெயில் அதிகமா இருக்குன்னு நீர்நிலை உள்ள இடங்களில் வீடு காட்டி ஜாலியாக வாழ்கிறார்கள்.
  இதெல்லாம் தப்பில்லையா என்று வளர்ந்து வரும் அரசியல்வாதி ஒருவர் தனது ஆட்களைக் கூட்டமா அழைத்துப் போய் புகார் கொடுத்திருக்கிறார். அப்படியொரு புகார் வந்ததாகவே எந்த அதிகாரிகையும் கண்டுக்காமல் தங்கள் கடமைகளை சரியாக செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

  துண்டுப் பேப்பர் செய்யாததை ஒரு போஸ்டர் செஞ்சிடும் என்ற மதுரை மக்களின் நம்பிக்கைப்படி இப்படியொரு போஸ்ட்டர் அடிச்சு ஒட்டியதால் மதுரை பற்றி எரிகிறது… நல்லது நடந்தால் நன்றி தெரிவித்து நானும் ஒரு போஸ்டர் ஒட்டுறதா வேண்டிக்கிறேன்.