தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வரும் டெல்லி! மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு

  0
  3
  delhi gun fire

  டெல்லியில் சட்ட மன்ற தேர்தல் காரணமாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  காவல்துறையினரும்  துணைராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

  டெல்லியில் சமீபமாக நடக்கும் சம்பவங்களை பார்த்து இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் ஷாஹீன் பாக் துப்பாக்கிச்சூட்டின் பிண்ணனி தெரியாமல் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

  இந்நிலையில், டெல்லியில் சட்ட மன்ற தேர்தல் காரணமாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  காவல்துறையினரும்  துணைராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

  delhi-gun-fire-008

  ஜாப்ராபாத் பகுதியில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இரு நபர்கள் அங்கிருந்த கடைகளை நோக்கி தாறுமாறாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்திருக்கலாம் என்றும் அதனால் இந்த வன்முறை செயல் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்குள்ள கணகாணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.