தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகள்

  137
   வரலட்சுமி விரதம்

  தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது மகாலட்சுமி சாயங்கால நேரத்தில் தோன்றிய தினம் இந்த வரலட்சுமி நோன்பு தினம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வருகின்ற வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிற விரதமே வரலட்சுமி விரதம். நாளை வரலட்சுமி நோன்பை கொண்டாடுகிறோம்.

  தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது மகாலட்சுமி சாயங்கால நேரத்தில் தோன்றிய தினம் இந்த வரலட்சுமி நோன்பு தினம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வருகின்ற வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிற விரதமே வரலட்சுமி விரதம். நாளை வரலட்சுமி நோன்பை கொண்டாடுகிறோம். திருமணம் ஆன சுமங்கலிப் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரத்தையும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல வரனையும் நல்கும் விரதமாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
  விரதம் மேற்கொள்ளும் முறை

  varalakshmi

  இன்று மாலையே வீட்டை சுத்தப்படுத்தி, செம்மண் சேர்த்த மாக்கோலம் இட்டு வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும்  சுமங்கலிப் பெண்கள் லட்சுமியை வரவேற்க தயாராக வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து,அதில் வாழை மரம்,மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.மண்டபத்தில் வாழை இலை மீது ஒரு படி அரிசியை பரப்பி, வைக்க வேண்டும். அரிசி மஞ்சள் ,குங்குமம்,வெற்றிலை ,பாக்கு, 1ரூபாய் நாணயம்,எலுமிச்சம் பழம், தோலை,கருகமணி பித்தளை செம்பு அல்லது வெள்ளி செம்பின் உள்ளே சேர்க்க வேண்டும். மாவிலை வாய்ப்பகுதியில் வைத்து கலசத்தின் மீது தேங்காய் வைக்கவேண்டும். தேங்காயில் மஞ்சள்,குங்குமம் வைத்து ,வெள்ளி அல்லது சந்தனத்தில் அவரவர் வசதிக்கேற்ப அம்மன் திருமுகத்தை வைத்திருக்கவேண்டும்.ஆடை,நகைகள் அணிவித்து அம்மனை அலங்கரிக்கவேண்டும். முதல் நாள் வாசலுக்கு அருகில் அம்மனை வைத்து மறுநாள் வரலட்சுமி பூஜையை துவக்க வேண்டும்.எங்கள் வீட்டில் எழுந்தருளி, நிரந்தரமாக வாசம் செய்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் தந்து அருள் செய்ய வேண்டும் என்று வீட்டிற்குள் அழைக்கவேண்டும்.

  varalakshmi

  அதன் பிறகு வாசலில் இருந்து கிழக்கு பார்த்து அம்மனை பூஜா மண்டபத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வடக்கு முகமாக உட்கார்ந்து பூஜையை தொடங்க வேண்டும். 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடி கலசத்தின் மீது சார்த்தி , அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி அஷ்டலட்சுமி ஸ்லோகம்,பாடல்கள் பாடி ஆராதனை செய்ய வேண்டும்.பூக்கள் ,தூப, தீபங்களால் அம்பாளை வழிபட வேண்டும். நெய் அல்லது தேன் கலந்த சாதம்,இட்லி,பசும்பால், தயிர், பாயசம், வடை ,கொழுக்கட்டைஇவற்றில் ஏதாவது 3 அல்லது 5 எண்ணிக்கையில் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
  அதன்பின், 9 இழைகள் கொண்ட  மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவனிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டிவிட சொல்லி , சரடை கட்டி கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் கட்டி விடுதல் வேண்டும். அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி, வழிபட வேண்டும்.அஷ்ட லட்சுமி சுலோகம்,பாடல்கள் பாடி வழிபட வேண்டும். 
  லக்ஷ்மிக்கு சாதம்,பாயசம்,வடை,கொழுக்கட்டை, இட்லி,தயிர்,பசும்பால்,நெய்,தேன் அல்லது கலந்த சாதம் 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை முடிவில் லட்சுமி தேவிக்கு மங்களம் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும். தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி மஞ்சளும்,குங்குமம் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.ஆரத்தி எடுத்தவுடன், யார் காலிலும் மிதிபடாதவாறு மரத்தின் கீழ் ஊற்றிவிட வேண்டும்.

  varalakshmi

  வரலக்ஷ்மி விரதத்தன்று நம் இல்லம் தேடி வருபவள் லட்சுமி .சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அம்பாளாக எண்ணி, உணவளித்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள்,குங்குமம்,ரவிக்கை துணி ,பணம்  என்று அம்பிகைக்கு பிடித்தமான பொருட்களை தாம்பூலமாக  வைத்து கொடுத்து உபசரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால்  நாம் லட்சுமி தேவிக்கு பிடித்தமானவர்கள் ஆகின்றோம்.நம் கோரிக்கைகளை ஏற்று , என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருவாள் என்பது ஐதீகம். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர் களுக்கும்  அன்னை மகாலக்ஷ்மியின்   அருள் பரிபூரணமாக  கிடைக்கும்.தாம்பூலம் யார் கொடுத்தாலும் அதை பெறுவது அன்னை மகாலக்ஷ்மியின் அனுக்கிரகத்தை பெறுவதாகும்.
  மறுநாள் காலையில், வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான பூஜை செய்து, வடக்கு முகமாக கலசத்தை நகர்த்தி அலங்காரத்தை அகற்ற வேண்டும்.  பூஜையின்போது “இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நான் பூஜை செய்யும் பாக்கியத்தை தர வேண்டும்” என்று கூறி, அம்பாளை வழி அனுப்பும் விதமாக கலசத்தை வடக்கு முகமாக  நகர்த்த வேண்டும்.கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தமாக நிறைந்திருக்கும் .
  பூஜையில் பயன்படுத்திய  பச்சரிசி, கலச தேங்காய் போன்றவற்றை கொண்டு,அடுத்து வரும்  வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயசம் செய்து நிவேத்தியம் செய்யலாம். இவ்விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து, வரலட்சுமியை வழிபட்டு வர , நம் கர்ம வினைகள் நீங்கி,  திருமணம் ,சந்தானம், தீர்க்க சுமங்கலி யோகம், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் என அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.