தீபாவளி வரப்போகுது… ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க!

  0
  19
  அங்காயப் பொடி

  பண்டிகை காலங்கள் துவங்கி விட்டாலே நமக்கு கொண்டாட்டம் தான். ஆனால், நம் வயிறு தான் பாவம். விதவிதமான திண்பண்டங்களைச் சாப்பிட்டு பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த பிறகும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் வரையில் எடுத்துக் கொள்கிறது. இந்த மாதிரியான நேரங்களில், வயிறு சம்பந்தமான உபாதைகளை தவிர்க்க அங்காயப் பொடி நல்ல உபயம். இப்பவே செய்து வெச்சுக்கோங்க!

  agiya podi

  தேவையான பொருட்கள் :
  வேப்பம்பூ – 1 டீஸ்பூன்
  சுண்டக்காய் வற்றல்  – 1 டீஸ்பூன்
  மணத்தக்காளி வற்றல் – 1 டீஸ்பூன்
  மிளகு   – 1 டீஸ்பூன்
  திப்பிலி    –   6
  சீரகம் -1 டீஸ்பூன்
  காய்ந்த மிளகாய் – 4
  துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
  பெருங்காயம் – சிறிதளவு
  தனியா – 1 டீஸ்பூன்
  உப்பு – தேவையான அளவு

  இவை அனைத்தையும் நன்றாக, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பருப்புப் பொடி செய்வது போல் மிக்ஸியில் நன்றாக இந்த கலவையைப் பொடித்து வைத்துக் கொள்ளவும், சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன், கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து அப்பளம் மற்றும் தயிர்பச்சடியுடன் இவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.

  angaya podi

  இந்த  சாதத்தைச் சாப்பிட்டு வந்தால்  பிரசவித்த  பெண்களுக்கு அஜீரணம் வாயு ஏற்படாமல்  தடுக்கும்.  தினமும் சிறிதளவு சாப்பிட  கைக்குழந்தைக்கு  மலச்சிக்கல்,  அஜீரணம்  வராது. பெரியவர்களுக்கும்  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல்,  அஜீரணம்  ஏற்படும் போது  இந்த அங்காயப்பொடி சாதத்தைச்  சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.