தீபாவளிக்கு முன்பு வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? 

  0
  1
  சங்கத்தமிழன்-அசுரன்

  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும்.

  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதி மூன்று திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவை எனை நோக்கி பாயும் தோட்டா, மகாமுனி மற்றும் ஜாம்பி.

  கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா பண பிரச்சினையால் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகிறது. மகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். ஜாம்பி ரத்த காட்டேறிகளைப் பற்றிய நகைச்சுவை படம். மேலும் இந்த படங்களுடன் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது தற்போது வருகிற 13-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.

  இதுதவிர இந்த மாதம் சூர்யாவின் காப்பான் படம் 20-ந்தேதி வெளியாகிறது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை 27-ந்தேதி வெளியாகிறது.

  இந்த நிலையில் அடித்த மாதம் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழின், தனுசின் அசுரன், ஜி.வி.பிரகாசின் 100 பர்சன்ட் காதல் ஆகிய படங்கள் 4-ந்தேதி வெளியாகிறது. விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தை 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளியன்று விடாயின் பிகில் படம் வெளியாவதால் இந்த படங்கள் முன்கூட்டியே ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.