தி.மு.க-வில் கொரோனா பீதி… நிகழ்ச்சிகளை ரத்து செய்த மு.க.ஸ்டாலின்

  0
  1
  mk stalin

  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  “தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியகாக கோவிட் 19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,

  கொரோனா பீதி காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் நடைபெற இருந்த கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  “தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியகாக கோவிட் 19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,
  தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.