தி.மு.க. பொது செயலாளராகப்போவது இவர்தான்… செம டென்ஷனில் செந்தில் பாலாஜி..!

  0
  6
  ஸ்டாலின் -செந்தில் பாலாஜி

  பொதுச்செயலாளர் பதவி மட்டுமே அங்கு காலியாகப்போகிறது. அந்தப்பதவியையும் சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு, பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலினே ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால்…

  திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.

  அதற்காக அவரது ஆதரவாளர்கள் நுாத்துக்கணக்கில் போஸ்டர்கள் அடித்து வாழ்த்து சொல்லி இருந்தனர். முன்னாள், எம்.எல்.ஏ., பரணிகுமார் அடிச்ச போஸ்டரில் ‘விரைவில் புதிய பதவி ஏற்க இருக்கும் அண்ணன் நேருவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என அடித்திருந்தார்.

  stalin

  ‘ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கே.என்.நேருவுக்கு, சீக்கிரமே புதிய பொறுப்பை ஸ்டாலின் தரப் போகிறார். அதை தான், பரணிகுமார் போட்டு உடைத்து விட்டார்’ என நேருவின் ஆதரவாளர்கள் உற்சாகத்த்தில் இருக்கிறார்கள். 

  பொதுச்செயலாளர் பதவி மட்டுமே அங்கு காலியாகப்போகிறது. அந்தப்பதவியையும் சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு, பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலினே ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் கொளம்பியதால், அந்தப்பதவியை தனது விசுவாசிக்கு கொடுக்க நினைக்கிறார் ஸ்டாலின்.

   senthil balaji

  அதை மனதில் வைத்து தான் கே.என்.நேருவுக்கு அப்படி ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால் சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி செம டென்ஷனில் இருபதாகக் கூறப்படுகிறது. அவர் கட்சியில் இணைந்த பிறகு மத்திய மாவட்டங்களில் தனது கையே திமுகவில் ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கான முக்கியத்துவத்தையும் ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு கொடுத்து வந்தார்.

  nehru

  இந்த நேரத்தில் கட்சியின் முக்கியப்பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு கே.என்,.நேரு வந்தால் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்து விடும் என்பதால் செந்தில் பாலாஜி அதிர்ச்சியாகி கிடப்பதாக கூறுகிறார்கள்.