திரைப்படமாகும் ‘மீ டூ’ சம்பவம்.!

  0
  1
  andhanimidam

  திரையுலகையே உலுக்கிய முக்கிய சம்பவமான ’மீ டூ’ திரைப்படமாக உருவாகிறது.

  சென்னை: திரையுலகையே உலுக்கிய முக்கிய சம்பவமான ’மீ டூ’ திரைப்படமாக உருவாகிறது.

  திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பல பிரபலங்கள் தங்களது மீ டூ அனுபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.

  மீ டூ பிரச்னையை மையமாக வைத்து ’அந்த நிமிடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் குழந்தை ஏசு என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

  andhanimidam

  லீ.கி.ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மஞ்சுளா தயாரிக்கும் இப்படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கவுள்ளனர். ஹீரோவாக மலையாள நடிகர் ருத்ராவும், ஹீரோயினாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசிங்கானும் நடிக்கவுள்ளனர்.

  மீ டூ சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இப்படத்தில் சென்னையில் இருந்து வேலைத் தேடி வெளிநாடு செல்லும் நாயகன் ஒரு மீ டூ பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அதனால் ஏற்படும் விபரீதங்களை சுற்றி இப்பட உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னை, இலங்கை, மலேசியா உள்ளிட்டங்களில் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.