திரெளபதி படம் பார்த்த அஜித் குடும்பம்!

  0
  10
  திரெளபதி

  இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில்  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியான திரெளபதி திரைப்படத்தை பாஜகவை சேர்ந்த எச். ராஜா, காயத்ரி ரகுராம் மற்றும் பாமகவை நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியிருந்தனர்.

  ThalaAjith's family

  இந்நிலையில் தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தனது குடும்பத்தாருடன் பார்த்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.