திருவாரூர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு

  0
  6
  seeman

  திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 

  திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் அந்த தொகுதியை தக்கவைத்துக்கொள்ள திமுகவும், தொகுதியை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுக, அமமுக போன்ற கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. 

  இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படும் சூழலில், தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. 

  இந்நிலையில், அக்கட்சியின் நிர்வாகியான சாகுல் அமீது என்பவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  மேலும், இடைத்தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.