திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே தாலியை கழற்றி எரிந்த மணமகள்!

  0
  1
  marriage

  திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே தாலியை கழற்றி மணமகனின் முகத்தில் வீசிவிட்டு அவரின் கண்ணத்தில் பளார் விட்ட மணமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே தாலியை கழற்றி மணமகனின் முகத்தில் வீசிவிட்டு அவரின் கண்ணத்தில் பளார் விட்ட மணமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்துவரும் விஜி என்பவருக்கும், ரேவதி என்கிற இளம்பெண்ணுக்கும் அப்பகுதியிலுள்ள கோவில் ஒன்றி திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணத்தில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். மணமகனும் மணமகளுக்கு தாலிக்கட்டி, நெற்றியில் பொட்டுவைத்தார். அதுவரை மெளனமாக இருந்த மணமகள் தீடிரென எழுந்து தாலியை கழற்றி வீசிவிட்டு, மணமகனின் கண்ணத்தில் ஓர் அறை விட்டார்.

  திருமணம்

  இதைப்பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சகரும், இரு வீட்டு உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். ஏன் மா… இப்படி பன்ற எனக் கேட்ட அர்ச்சகருக்கும் ப்ளார் என ஒரு அறைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இருவீட்டாரும் போலீஸ் நிலையம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மணமகளுக்கு மனநிலை சரியில்லாததும், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.