‘திருமணம் ஆன பெண்ணுடன் கள்ளத்தொடர்பு’.. கத்திக் குத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் : அதிர வைக்கும் பின்னணி!

  0
  1
  manikandan

  ஜோதிலட்சுமியின் அப்பா விபத்தில் சிக்கி காயமடைந்ததால், அவரை பார்த்துக் கொள்ள ஜோதிலட்சுமி மதுரைக்குச் சென்றுள்ளார்.

  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், மேலத் தெருவைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், அவர்களுக்குப் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஜோதிலட்சுமியின் அப்பா விபத்தில் சிக்கி காயமடைந்ததால், அவரை பார்த்துக் கொள்ள ஜோதிலட்சுமி மதுரைக்குச் சென்றுள்ளார். அப்போது, கார்த்திக் என்பவருடன் ஜோதிலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. 

  ttn

  இதனைக் கண்டு பிடித்த மணிகண்டன்,  ஜோதிலட்சுமியை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால் அதனைக் கேட்காத  ஜோதிலட்சுமி கார்த்திக் உடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தவில்லை. இதனிடையே கார்த்திக்,  ஜோதிலட்சுமியின் அம்மாவிடம் தனக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள்,  ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இருப்பினும் அவர்களை வற்புறுத்திய கார்த்திக், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

  ttn

  அதன் பின்னர் நேராக மணிகண்டன் வீட்டுக்குச் சென்று, அவரது மாமனார் அவரை அழைப்பதாகப் பொய் சொல்லிக் கூட்டச் சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து மணிகண்டனின் செல்போன்  சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, ஜோதிலட்சுமியின் வீட்டுக்கு சென்ற கார்த்திக், உன் மருமகனைக் கொலை செய்து விட்டேன்.. இப்போது திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, மறுநாள் மணிகண்டனின் உடலை 7 தோப்பில் போலீசார் கண்டெடுத்துள்ளனர். அவரது உடல் 7 இடங்களில் கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.  

  ttn

  அதன் பின்னர் மணிகண்டனின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாகி உள்ள கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணை அடைவதற்காக அவரது கணவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.