திருமணத்தை நிறுத்த  காதலனுடன் கசாமுசாவாக இருந்த போட்டாக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய பெண் !

  0
  2
  மாதிரி படம்

  காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலனுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தினார். 

  சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வேலை செய்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தான் வேறு ஒருவரை காதலிப்பதை எப்படியாவது மாப்பிள்ளைக்கு தெரிவிக்க வேண்டும் என எண்ணினார்.

  காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலனுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தினார். 

  lovers

  சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வேலை செய்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தான் வேறு ஒருவரை காதலிப்பதை எப்படியாவது மாப்பிள்ளைக்கு தெரிவிக்க வேண்டும் என எண்ணினார். இதை அடுத்து தன்னுடைய காதலனுக்கு போன் செய்து தன்னுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்புமாறு யோசனை கூறியுள்ளார்.

  whatsapp

  காதலி சொன்னபடியே அவரும் அந்த பெண்ணுடன் சேர்ந்து ஊர் சுற்றிய புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளார். திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் புது நம்பரில் இருந்து வந்த புகைப்படங்களால் மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருமணமும் நிறுத்தப்பட்டது. பின்னர் தன்னுடைய உறவினர் பெண் ஒருவரை அதே தேதியில் மணந்து கொண்டார் மாப்பிள்ளை. இதையடுத்து திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அது அந்த காதலியின் காதலன் செல்போனில் இருந்து வந்தது தெரியவந்தது. திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் அந்த பெண்தான் இதுபோல் செய்ய சொன்னதாக காதலன் போலீசில் தெரிவித்தார். இதையடுத்த இருவரையும் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். பிள்ளைகளின் விருப்பம் இன்றி செய்யப்படும் திருமணங்களால் சில சமயம் பெற்றோருக்கு அவமானம் ஏற்பட்டு விடுகிறது.