திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி.. அந்தரங்க போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் கைது!

  0
  2
  kalaiyarasan

  இணைய தளத்தில் ஆபாசப் படங்களை வெளியிடுவது குற்றம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், காதலியைப் பழிவாங்கும் நோக்கில் இளைஞர்கள் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தான் வருகிறார்கள்.

  இளைஞர்கள் காதலிப்பதும் அந்த காதலுக்கு அந்த பெண்ணோ அல்லது அவரது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் உடனே ஆசிட் ஊற்றுவது, ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவது என இளைஞர்கள் செய்யும் கொடூரச் செயல்களுக்கு அளவே இல்லை. இணைய தளத்தில் ஆபாசப் படங்களை வெளியிடுவது குற்றம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், காதலியைப் பழிவாங்கும் நோக்கில் இளைஞர்கள் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தான் வருகிறார்கள். இந்நிலையில், இதே போன்ற குற்றத்தைச் செய்ததற்காகக் கடலூரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

  ttn

  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கடலூரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது வீடு ரொம்ப தொலைவு என்பதால் கடலூரில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிலேயே தங்கிக் கொண்டு வேலை பார்த்து வந்துள்ளார். கலையரசனுக்கும் செல்போன் கடையில் வேலை பார்த்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்வதற்காகப் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டுள்ளனர். 

  ttn

  ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அதனால், அந்த பெண் சிறிது காலமாகக் கலையரசனுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கலையரசன் அந்த பெண்ணின் அந்தரங்க போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் பேரில், கலையரசனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.