திருமணத்துக்கு ‘நோ’ சொன்ன காவலர்: விஷம் குடித்து தாலிகட்ட வைத்த பெண் போலீஸ்!

  14
  திருமணம்

  தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மணமக்கள் இருவரும் சோகமாகவே திருமண நிகழ்வில் காணப்பட்டனர்.  

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ர்ந்தவர் கண்ணன். இவரின் உறவினர் மகள் நதியா. கண்ணன் மோப்பநாய் பிரிவிலும், நதியா ஆயுதப்படை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர்.  இதனிடையே கண்ணனும் பதியவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

  love

  இதையடுத்து கண்ணன் சமீபத்தில் நதியாவை திருமணம் செய்த கொள்ள மறுத்துள்ளார். இதனால் நதியா  விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில் அவரது உறவினர்கள் நதியா மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  இந்த விவகாரம் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா காதுக்கு எட்ட கண்ணனை அழைத்து  விசாரித்துள்ளார். இதன் பிறகு கண்ணன் நதியாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகத்  தெரிகிறது.

  lover

  இந்நிலையில் காவலர்கள்  கண்ணன் – நதியா இருவருக்கும் போலீசார் மற்றும் பெற்றோர் முன்னிலையில் தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மணமக்கள் இருவரும் சோகமாகவே திருமண நிகழ்வில் காணப்பட்டனர்.