திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வருக்கு பதவி…

  0
  1
  திருப்பதி

  திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியநாதன், இந்தியா சிமென்ட்ஸின் தலைவரான எஸ்.சீனிவாஸன், மருத்துவர் ஒருவர் மற்றும் உளூந்தூர் பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான குமரகுரு உள்ளிட்டோரை நியமித்து அரசாணையை வெளியிட்டார்.

  திருப்பதி தேவஸ்தானத்தில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அறங்காவலர் குழுவில் உறுப்பினர் பதவி அளித்து ஆந்திர அரசு அரசாணையை வெளியிட்டது.

  ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் 16 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவானது தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் கலைக்கப்பட்டது. அவர் ஒரு புதிய குழுவை நியமித்து இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி அறிவித்தார்.ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

  இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த வைத்தியநாதன், இந்தியா சிமென்ட்ஸின் தலைவரான எஸ்.சீனிவாஸன், மருத்துவர் ஒருவர் மற்றும் உளூந்தூர் பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான குமரகுரு உள்ளிட்டோரை நியமித்து அரசாணையை வெளியிட்டார்.