திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.89.07 கோடி உண்டியல் காணிக்கை

  53
  tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.89 கோடியே 7 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

  திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.89 கோடியே 7 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

  திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகின் அதிக உண்டியல் பணம் குவியும் ஆன்மீக தலமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி ரூபாய்கள் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை தொகையை கணக்கிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

  ttn

  அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்துள்ளனர். அத்துடன் ரூ.89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 82 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.