திருப்பதி அகண்ட தீபம் அணைந்ததா? – பக்தர்கள் அதிர்ச்சி… ஜீயர் விளக்கம்!

  0
  5
  திருப்பதி தீபம்

  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்ம தீபம், அகண்ட தீபம் என்று இரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. சுப்ரபாத சேவையின் போது இந்த இரு தீபங்களும் ஏற்றப்பட்டு, இரவு ஏகாந்த சேவைக்குப் பிறகு குளிர்விக்கப்படும். அதன் பிறகே நடை சாற்றப்படும்.

  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் அகண்ட தீபம் அணைந்ததாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று திருமலை ஜீயர் தெரிவித்துள்ளார்.
  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்ம தீபம், அகண்ட தீபம் என்று இரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. சுப்ரபாத சேவையின் போது இந்த இரு தீபங்களும் ஏற்றப்பட்டு, இரவு ஏகாந்த சேவைக்குப் பிறகு குளிர்விக்கப்படும். அதன் பிறகே நடை சாற்றப்படும். கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திருப்பதி திருமலையில் நடக்கும் அனைத்து சேவைகளும் எந்த ஒரு தொய்வுமின்றி நடத்தப்பட்டு வருகிறது.

  tirumala-tirupathi

  இந்த நிலையில் கோவிலில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம் அணைந்துவிட்டது என்று தகவல் பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அகண்ட தீபம் அணைந்தது மிகப்பெரிய அபசகுனம் என்று பக்தர்கள் வருந்தினர்.

  turupathi-jeeyar

  இது குறித்து திருமலை மடத்தின் பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர், சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஏழுமலையான் கோவிலில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம் அணைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினர். இதனால், பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.