திருப்பதியில் இவங்களுக்கெல்லாம் விரைவு தரிசனம்…! தெரிஞ்சுக்கோங்க…!

  0
  7
  திருப்பதி

  வருடத்தின் எல்லா நாட்களிலுமே உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகிறார்கள். புரட்டாசி மாதம் முடிவுற்றாலும், திருமலையில் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. சனிக்கிழமைகளில் இந்த கூட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கவே செய்கிறது.

  வருடத்தின் எல்லா நாட்களிலுமே உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகிறார்கள். புரட்டாசி மாதம் முடிவுற்றாலும், திருமலையில் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. சனிக்கிழமைகளில் இந்த கூட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கவே செய்கிறது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களில் மூத்த குடிமக்களுக்கும், கைக் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இலவச தரிசனத்திற்கு விரைவாக சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, இன்று  அக்.15-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த விரைவு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

  thirupathi

  இந்த விரைவு தரிசன வழியாக காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வரையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதேபோல் நாளை அக். 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சுபதம் வழியாக விரைவு தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் இதே போல் 15,16 ம் தேதிகளில் உங்கள் பயண ஏற்பாட்டை செய்துக் கொண்டால், திருமலையில் கூட்டத்தில் இருந்து தப்பித்து விரைவில் சுவாமி தரிசனம் செய்யலாம்.