திருட்டுப் பயலே சிசிடிவி பாராடா ! உழைத்து முன்னேற முடிவெடுத்த திருடன் !

  0
  2
  cctv

  திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் வீட்டில் சிசிடிவி இருந்ததை பார்த்து பயந்துபோய் திருடாமல் சென்ற நகைச்சுவை சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

  திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் வீட்டில் சிசிடிவி இருந்ததை பார்த்து பயந்துபோய் திருடாமல் சென்ற நகைச்சுவை சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

  சென்னை குரோம்பேட்டை அருகே ஜெயா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் பணிநிமித்தம் காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் வீடு யாரும் இல்லாமல் காலியாக இருந்ததை பார்த்த கொள்ளையன் நள்ளிரவில் அவரது வீட்டின் இரும்பு கிரில் கேட்டை நீண்டை ராடை வைத்து உடைக்கிறான். ஒருவழியாக நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழையும்போது எதேச்சையாக மேலே பார்க்கிறான் கொள்ளையன். அப்போது அங்கு அவன் செய்த லீலைகளை எல்லாம் சிசிடிவி கேமராக அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதனால் நொந்து போன கொள்ளையன் இவ்வளவு கஷ்டப்பட்டும் வீணாகிவிட்டது என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.

  chrompet

  வெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் ஸ்ரீதர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன. இதையடுத்து கொள்ளையன் திருட்டு முயற்சி குறித்து ஸ்ரீதர் புகார் அளித்ததை அடுத்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தெருக்கு தெரு, வீட்டுக்கு வீடு என சிசிடிவி கேமராக்க வைக்கப்பட்டுள்ளது கூட தெரியாத அப்பாவியாக எத்தனை நாட்கள் திருடர்கள் இருக்கப் போகிறார்கள்?