திருடனுடன் துணிச்சலாக சண்டை போட்ட முதியவர்…வைரல் வீடியோ!

  0
  4
  வீடியோ

  காரை  நிறுத்திவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு காரை  நோக்கி செல்ல முற்பட்ட போது  அங்கு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

  இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் உள்ள ஏடிஎமிற்கு 77 வயதான முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். காரில் வந்த அவர்,காரை  நிறுத்திவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு காரை  நோக்கி செல்ல முற்பட்ட போது  அங்கு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

  ttn

  அவர் முதியவரிடமிருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் அவரை தாக்குகிறார். ஆனால் முதியவரோ துணிச்சலாக அந்த திருடனுடன் குத்துச்சண்டையிடுகின்றார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

  இந்த வீடியோவை அந்நாட்டு போலீஸ் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். திருடனுடன் தைரியமாகச் சண்டையிட்ட அந்த முதியவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.