திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர்

  0
  5
   கைது

  கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் 33வாக்கி டாக்கி மாயமாகின இது குறித்து போலீசார் அலுவலகத்தில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.    
                                                                                                                                                                                 

  police

  ஆனால் வாக்கி டாக்கி குறித்து தகவல் கிடைக்காத நிலையில் பின்பு எஸ்.பி அலுவகத்தில் பணியாற்றிவந்த துப்புரவு பணியாளர்களை விசாரித்து வந்தனர். இதில் துப்புரவு பணியாளர் சீனிவாசன் மற்றும் கனகராஜ் ஆகியோர் களவாடியது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை செய்யும் பொழுது எஸ்.பி அலுவலகத்தில் உள்ள 33 வாக்கி டாக்கி மற்றும் 11 கையடக்க மைக் போன்ற கருவிகளை திருடி வெளியில் விற்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.