திருச்சியில் அகற்றப்படாமலிருக்கும் பேனர்கள்! காசை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமலிருக்கும் அதிகாரிகள்!!

  0
  2
  Banner

  பேனர்கள் வைக்ககூடாது என உத்தரவிட்டபிறகும் திருச்சியில் எந்த பேனர்கள் அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

  பேனர் வைக்ககூடாது என உத்தரவிட்டபிறகும் திருச்சியில் எந்த பேனர்கள் அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

  சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து சென்னையில் பேனர் வைக்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

  subha

  சில ஆண்டுகளுக்கு முன்பே,  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பிலக்ஸ் தட்டிகள் மற்றும் பேனர்கள் சாலை அருகே வைக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்து தடை உத்தரவை பெற்றார். ஆனால் தொடர்ந்து பேனர்கள் தமிழகத்தில் வைக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் இளம்பெண் பேனர் மோதி கீழே விழுந்து உயிரிழந்ததையடுத்து பல மாவட்டங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் இதுவரை இந்த பேனர்கள் அகற்ற இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  banner

  திருச்சியில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.  உயிர்பலிக்கு முன் பேனர்கள்  அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.