திருச்சியிலுள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎமில் பட்ட பகலில் கொள்ளை!

  0
  9
  ATM

  திருச்சியிலுள்ள் ஏடிஎம்மில் பணம் நிரப்பவந்த வங்கி ஊழியர்களை திசைத்திருப்பி கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

  திருச்சியிலுள்ள் ஏடிஎம்மில் பணம் நிரப்பவந்த வங்கி ஊழியர்களை திசைத்திருப்பி கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

  திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அதனை சுற்றி உள்ள டாட்டா இண்டிகோ ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பக்கூடிய பணியை செய்யக்கூடிய நிறுவனம் லோகி கேஸ் ஏஜென்சி. அந்த நிறுவன ஊழியர்கள் இன்று காலை ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக திருச்சி மலைக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு வந்துள்ளனர். 

  CUB
  சரவணன் என்ற ஊழியர் 18.5 லட்சம் ரூபாயும் அருண் என்ற ஊழியர் 16 லட்சம் ரூபாயும் உடைய பைகளில் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் என்ற ஊழியரின் கையிலிருந்த  பணப்பையை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். அந்தப் பையில்  16 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளியை பிடிப்பதற்கான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.